
ஓபன் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
செயல் நுண்ணறிவு தளம் சாட் ஜிபிடி-யின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு மேற்கொண்டதாக எலான் மஸ்க் தரப்பு வழக்குரைஞர் உறுதி செய்துள்ளார்.
ஓபன் ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலருக்கோ (ரூ. 8.45 லட்சம் கோடி) அதனைவிட கூடுதல் விலைக்கோ வாங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எலான் மஸ்க் குழு மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமர் வாழ்த்து!
இருப்பினும், ஓபன் ஏஐ விற்பனை குறித்த எலான் மஸ்க்கின் கோரிக்கைக்கு ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தை வேண்டுமானால் 9.74 பில்லியனுக்கு வாங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் ஓபன் ஏஐ நிறுவனம் நிறுவப்பட்டபோது, எலான் மஸ்க்கும் அதன் இணை நிறுவனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லாப நோக்கற்ற ஓபன் ஏஐ நிறுவனம், லாபத்தை நோக்கிச் செல்வதாகவும் கூறியதுடன், நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் தன்னிடம்தான் இருக்க வேண்டும் கூறிய எலான் மஸ்க், பின்னாளில் நிறுவனத்திலிருந்து விலகினார்.
இருப்பினும், லாபம் சார்ந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு எலான் மஸ்க் முன்னதாகவே சம்மதம் தெரிவித்ததாகவும் ஓபன் ஏஐ கூறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.