உக்ரைனுக்கான உதவிகளை அதிகப்படுத்த நேட்டோவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்!
ஐரோப்பியா - அமெரிக்கா - உக்ரைன் பிரதிநிதிகளிடையிலான முக்கிய ஆலோசனை கூட்டம் பற்றி...

உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி
AP

உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி
AP
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலராகப் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பீட் ஹெக்செத், ப்ரூஸ்ஸெல்ஸ் நகரில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் இன்று(பிப். 12) நடைபெற்ற நேட்டோ ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
நேட்டோ உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து உக்ரைன் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த ஆலோசனை கூட்டத்தில், உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவதை அதிகப்படுத்துமாறும், அந்நாட்டுக்கான ராணுவ உதவியை அதிகரிக்கவும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்த இருப்பதாக நேட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை(பிப். 11) ஹெக்செத் பேசியதாவது, “ஐரோப்பிய கண்டமானது எந்தவித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலிருந்து விடுபட்டு சுதந்திர பூமியாக விளங்க தகுதியுள்ளது. அதேவேளையில், அவர்கள் தங்கள் அண்டைப் பிரதேசங்களின் கூட்டு பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும்” என்று பொருள்பட பேசியுள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை(பிப். 12) உக்ரைன் பிரதிநிதிகளுடன் சர்வதேச அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் ஹெக்செத், வியாழக்கிழமை(பிப். 13) நேட்டோவிலுள்ள பிற 31 நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அதனைத்தொடர்ந்து, முனிச் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாடு ஒன்றில் உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ் சந்தித்துப் பேசவுள்ள நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து இரு நாள்கள் நடைபெறும் மேற்கண்ட நேட்டோ ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்தும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டின்போது ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...