மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் எச்சரித்துள்ளார்.
கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய காரணத்தால் கூகுள் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன், உலகளவில் சர்ச்சையைக் கிளப்பும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்வதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், மெக்சிகோவில் நடைபெற்ற கால்பந்து போட்டியைக் காண விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்தவாறே மெக்சிகோ வளைகுடா பெயர் மாற்றத்துக்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதையும் படிக்க: போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!
இதனிடையே, மெக்சிகோ வளைகுடா பெயர் மாற்றம் குறித்து டிரம்ப் அறிவித்த சில நாள்களிலேயே கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றியது.
இருப்பினும், இந்த பெயர் மாற்றமானது கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டது. மெக்சிகோ வளைகுடாவில் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடா என்றும், அமெரிக்காவில் அமெரிக்க வளைகுடா என்றும், இதர நாட்டில் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடா (அமெரிக்க வளைகுடா) என்றும் கூகுள் நிறுவனம் பெயர் மாற்றம் செய்துள்ளது.