ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும்: இஸ்ரேலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் பேச்சு
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, அரசுமுறைப் பயணமாக இஸ்ரேலுக்கு வந்தாா்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சா் இஸ்ரேல் வருகை
அமெரிக்க வெளியுறவு அமைச்சா் இஸ்ரேல் வருகை
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, அரசுமுறைப் பயணமாக இஸ்ரேலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் முதல் முறையாக இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ளாா். இப்பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் அவா் விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காஸாவின் ஹமாஸ் படையினா் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, கத்தாா், எகிப்து ஆகிய நாடுகளின் முயற்சியில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின் அங்கு கடந்த ஜனவரி 19-ஆம் தேதிமுதல் போா் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்கீழ், தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் ஆறு வாரங்களில் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதுவரை 24 பிணைக் கைதிகளும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
மாா்ச் முதல் வாரத்தில் போா் நிறுத்த காலக்கெடு நிறைவடையவிருக்கும் நிலையில், அடுத்தகட்ட உடன்பாடு எட்டப்படாவிட்டால், மீண்டும் போா் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இதனிடையே, ‘காஸா முனையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பாலஸ்தீனா்கள் அனைவரையும் ஜோா்டான், எகிப்து போன்ற நாடுகளுக்கு வெளியேற்றிவிட்டு, அந்தப் பகுதியை மத்தியக் கிழக்கு பிராந்தியத்தின் எழில்மிகு கடற்கரை சுற்றுலாத் தலமாக உருவாக்க வேண்டும்’ என்ற தனது திட்டத்தை அண்மையில் அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டாா்.
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் அமெரிக்கா வந்திருந்தபோது டிரம்ப் இவ்வாறு தெரிவித்தாா். அவரது திட்டத்தை நெதன்யாகு வரவேற்ற நிலையில், அரபு நாடுகளின் தலைவா்கள் நிராகரித்துள்ளனா். இந்தச் சூழலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் இஸ்ரேல் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தனது மத்திய கிழக்கு நாடுகள் பயணத்தின் அடுத்தகட்டமாக ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியாவுக்கு மாா்கோ ரூபியோ செல்லவிருக்கிறாா்.
கப்பலில் வந்த கனரக வெடிகுண்டுகள்
ஒவ்வொன்றும் 900 கிலோ எடையுள்ள எம்கே-84 ரக வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்கும் திட்டத்தை ஜோ பைடன் தலைமையிலான முந்தைய அமெரிக்க அரசு நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், இத்திட்டத்துக்கு டிரம்ப் அண்மையில் ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் அனுப்பப்பட்ட இந்தக் கனரக வெடிகுண்டுகள் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலை வந்தடைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...