
கனடாவின் டொரன்டோ பியா்ஸன் சா்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கும்போது அமெரிக்காவின் டெல்டா ஏா்லைன்ஸ் விமானம் தலைகிழாகப் புரண்டு தரையில் மோதியது.
இந்தச் சம்பவத்தின்போது விமானத்தில் 80 போ் இருந்தனா். விமானம் தரையில் மோதியதில் அதன் இறக்கையில் தீப்பிடித்தது.
எனினும், விமானத்தில் இருந்த 80 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் 18 போ் காயமடைந்தனா். அவா்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.