வங்கதேச விமானப்படைத் தளம் மீது தாக்குதல்: ஒருவர் பலி
வங்கதேசத்தில் காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.
வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது அருகிலுள்ள சமிதிபாரா பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் ஷிஹாப் கபீர் நஹித் (25) என்பவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் மக்களுக்கும் வங்கதேச விமானப்படையினருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மக்கள், விமானப்படை தளம் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் உள்ளூர் மக்களுக்கும் வங்கதேச விமானப்படைக்கும் இடைய மோதல் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்குக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.