நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

விண்வெளிக்குச் செல்லும் பிரபல பாடகி! யார் தெரியுமா?

பாடகி கேட்டி பெர்ரி விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம்..

News image

கேட்டி பெர்ரி | புளூ ஆரிஜின் விண்கலம்

Updated On :28 பிப்ரவரி 2025, 8:49 am IST

பிரபலப் பாடகியாக கேட்டி பெர்ரி மற்றும் 2 பெண் செய்தியாளர்கள் குழுவினர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஹாலிவுட் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப் புகழ்பெற்ற பாடகியான கேட்டி பெர்ரி புளூ ஆரிஜினின் என்எஸ்-31 திட்டத்தின் மூலம் புதிய வரலாறு ஒன்றைப் படைக்கவுள்ளார்.

அந்தத் திட்டத்தின் மூலம் 1963 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற வலண்டீனா தெரெஸ்க்கோவாவுக்கு பின்னர் பெண்கள் மட்டும் அடங்கிய ஒரு குழுவினர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர். இவர்கள் நியூ ஷெபர்ட் விண்கலம் மூலமாக வருகிற செப்டம்பர் மாதத்தில் விண்வெளிக்குச் செல்லவுள்ளனர்.

இதுபற்றி கேட்டி பெர்ரி கூறுகையில், “எனது பயணம் எனது மகளையும் மற்றவர்களையும், நட்சத்திரங்களை எட்ட ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கு ஜெஃப் பெசோஸின் வருங்கால மனைவியும் மூத்த செய்தி நிருபருமான லாரன் சான்செஸ் தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவருடன் கேட்டி பெர்ரி, சிபிஎஸ் தொகுப்பாளர் கெய்ல் கிங், மனித உரிமைகள் ஆர்வலர் அமண்டா நுயென், திரைப்பட தயாரிப்பாளர் கெரியான் ஃப்ளைன் மற்றும் முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா போவ் உள்ளிட்ட முக்கிய நபர்களும் இணைந்துள்ளனர்.

இந்த விண்கலம் மூலம் ஊடகம், அறிவியல், கலை உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்கள் விண்வெளி வீராங்கனைகளாகப் பயணிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.