உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!தவெக 6 மாத ஆட்சியில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள்தமிழக காவல்துறை அதிரடி: 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைதுதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!8 நாள்களில் ரூ. 1,000 கோடி வசூலித்த ராமாயணா!

போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஹிஸ்புல்லா!

ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம்

Updated On :

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நூற்றுக்கணக்கான முறை மீறி வருவதாகவும், தங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இரு மாதங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில், தெற்கில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், ஆக்கிரமிப்பு ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் ஆண்டோனியோ கட்டேரஸ் லெபனானுக்கு வியாழனன்று (ஜன. 16) சென்றார்.

அங்கு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கட்டேரஸ், “ஹிஸ்புல்லா அல்லது மற்ற ஆயுதக் குழுக்களுக்குச் சொந்தமான 100 ஆயுதக் களஞ்சியங்களை ஐ.நா. அமைதிப்படையினர் கண்டுபிடுத்துள்ளனர்” என்றார்.

இதையும் படிக்க |

இது தொடர்பாகப் பேசிய ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம், “லெபனான் அரசு மீறல்களை எதிர்கொள்வதில் உறுதியாக இருக்கவேண்டும். தற்போது, 100-க்கும் மேற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடரக் கூடாது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவு இருப்பதால் லெபனான் அரசுக்கு வாய்ப்பு கொடுத்து நாங்கள் இந்த மீறல்களைப் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். எங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்” என அவர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐநா செயலாளர் லெபனானின் புதிய அதிபர் ஜோசப் அவுனை சந்தித்தப் பின்னர் ஹிஸ்புல்லா தலைவர் காசிம் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 27 அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல், ஹிஸ்பொல்லா இடையிலான போர் முடிவுக்கு வந்தது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் இராணுவம் வெளியேறி லெபனான் ராணுவம் 60 நாட்களில் ஐ.நா. அமைதிப்படையுடன் இணைந்து அங்கு அடுத்தக்கட்ட பணிகளில் ஈடுபடவேண்டும். அதே நேரத்தில், ஹிஸ்புல்லா அமைப்பினர் தனது படைகளை லிட்டானி நதியின் வடக்கு எல்லையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு பின்வாங்க வேண்டும். மேலும், தெற்கில் உள்ள மீதமுள்ள ராணுவ கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இஸ்ரேலுடனான போரிற்குப் பின்னர் ஹிஸ்புல்லா அமைப்பு வலுவிழந்ததால் பாதிக்கப்பட்ட அரசியல் தரப்பு அவுனை அதிபராகத் தேர்ந்தெடுத்ததாகவும், இதனைத் தொடர்ந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நவாஸ் சலாம் பிரதமராக அவரது ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று லெபனான் சென்றிருந்த பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.