டொனால்ட் டிரம்ப் விருந்து: நீதா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ்!

டொனால்ட் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் நீதா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ் பற்றிய தகவல்.
முகேஷ் அம்பானி - நீதா அம்பானியுடன் டொனால்ட் டிரம்ப்.
முகேஷ் அம்பானி - நீதா அம்பானியுடன் டொனால்ட் டிரம்ப்.
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபரா பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

எந்தவொரு நிகழ்ச்சியில் நீதா அம்பானி கலந்து கொண்டாலும், அவரைப் பற்றி குறிப்பிட்டு சில தகவல்கள் வரும். அதில், அவரது ஆடையலங்காரம் இடம்பெறாமல் இருக்காது. அவரது ஆடைத் தேர்வும், அணிகலன் தேர்வும், அவ்வளவு புகழ்பெற்றது.

அந்த வகையில்தான், அமெரிக்க அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதா அம்பானி அணிந்திருந்த கறுப்பு நிற புடவையில் தங்க ஜரிகையிலான பட்டுப்புடவையும், மரகத கற்களால் வடிவமைக்கப்பட்ட நெக்லஸும், விருந்தில் பங்கேற்ற பல முக்கிய விருந்தினர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

ஒரு நவீன ஆடை அலங்காரத்தில் நிபுணத்துவம் பெற்றவராகவே நீதா அம்பானி இருந்து வந்துள்ளார். அவ்வப்போது அவரது ஆடை அலங்காரம் தனிக்கவனம் பெற்றுவருவதும் வழக்கமே.

அந்த வகையில், கறுப்பு நிற பட்டுப்புடவையில் தங்க நிற வேலைப்பாடுகள், செங்குத்து கோடுகளாக இடம்பெற்றிருந்தது. கறுப்பு நிறத்தை மேலும் மெருகூட்ட வெளிர் சிவப்பு நிற பார்டர் புடவையை மேலும் அழகூட்டும் வகையில் இருந்தது. அதனுடன் மரகத கற்களால் வடிவமைக்கப்பட்ட நெக்லஸ் அணிந்திருந்தது, ஏராளமான விருந்தினர்களின் கண்களைக் கொள்ளைகொண்டிருக்கும் என்றே சொல்லலாம்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று (ஜனவரி 20) பதவியேற்க உள்ளார். துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸுடன் தனது இரண்டாவது அலுவல்பூர்வ பதவிக்காலத்தை இன்றைய நாளில் தொடங்குகிறார் டிரம்ப். 1980-ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் உள்ளது போல தற்போதைய பதவியேற்பு விழாவும் கேப்பிடல் எனப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறவிருக்கிறது.

பதவியேற்பு என்றால்.. வெறும் பதவியேற்பு அல்ல..

அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்வில் பாரம்பரியமாக, துணை அதிபரின் பதவியேற்பு, அதிபரின் பதவியேற்பு, அதிபரின் தொடக்க உரை, முந்தைய அதிபரின் புறப்பாடு, அதிபர் பதவிப் பிரமாணத்தில் கையொப்பமிடும் நிகழ்வு, மதிய உணவு விருந்து ஆகியவை இடம்பெறும்.

உலக மக்களிடையே ஆவலையும் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ள இந்த நிகழ்வு குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டேயிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com