கரோனா: வூஹான் பொதுமுடக்கம் தொடங்கி 5 ஆண்டுகள்!

வூஹான் பொதுமுடக்கம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்..
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பெய்ஜிங்: கரோனா என்ற பெருந்தொற்று உலகையே ஒரு உலுக்கு உலுக்கியெடுத்துச் சென்றுவிட்டது. சீனாவின் வூஹான் மாகாணத்தில், கரோனா பொதுமுடக்கம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

ஆனாலும், உலகம் சந்தித்த இழப்புகளை சரிகட்ட இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான், வூஹான் மாகாணத்துக்கு மக்கள் செல்ல அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். வெளி நபர்களுக்கு கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வூஹான் செல்ல தடை விதிக்கப்பட்டதுதான், கரோனா பொதுமுடக்கத்தின் முதல் கட்டம். அதன்பிறகு, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த படிப்படியாக விதிக்கப்பட்ட தடைகள் பொதுமுடக்கம் வரை இட்டுச்சென்றது. ஆனாலும், கரோனா பல லட்சம் உயிர்களை பலிகொண்டது.

சீனாவில், பொதுமுடக்கம், தனிமைப்படுத்தும் முகாம்கள், தினந்தோறும் கரோனா சோதனைகள், கரோனா பாதித்தவர்கள் இருந்த வீடுகளுக்கு சீல், மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் மட்டும் சிகிச்சை பெற்றது, கரோனாவால் பலியானவர்களை சுகாதாரத் துறையே அடக்கம் செய்தது என அனைத்தும் மனித இனத்துக்கு எதிராக கரோனா செய்த கோரச்செயல்களின் முகங்கள்தான்.

முதலில், சீனாவில் என்ன நடக்கிறது என்பதையே உலகிடம் இருந்து மறைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டது. தகவலை வெளியிடும் மருத்துவத் துறையினர், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனாலும், கரோனா என்ற மிகக் கொடூர அரக்கனின் பிடியில் சீனா முற்றிலும் சிக்கிக்கொண்ட போது, அது உலக நாடுகளுக்கும் பரவி தன்னுடைய வேலையைக் காட்டத் தொடங்கியிருந்தது. அதன்பிறகு, கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது. அதனால், கரோனா பரவல் குறைந்தாலும், அதன் பக்கவிளைவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீர் மாரடைப்பு அதிகரித்து வருகிறது.

இந்த கொடூர அனுபவத்தை மனித இனம் எதிர்கொண்டு தற்போது ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால், உலகம் அதனால் இழந்ததை மீண்டும் கொண்டு வருவதில் எத்தனையோ சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. சில சீர்படுத்த இயலாத அளவில் சின்னாபின்னமாகிப் போயின.

மனித உடல் ஆரோக்கியம், பழக்க வழக்கங்கள், சிறார்களின் கையில் செல்போன் என மனித இனத்தின் எதிர்காலத்தையே 3 ஆண்டுகளில் பொசுக்கிச் சென்றுவிட்டது இந்த கரோனா எனும் கொடிய வைரஸ்.

இதையும் படிக்க.. கரோனா வைரஸுக்குக் களப் பலி ஹூபெ மாகாணம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com