போர் நிறுத்த காலத்திலும் இஸ்ரேலுக்கு கனரக குண்டுகளை வழங்கிய டிரம்ப்!

அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் மார்க் 84 ரக குண்டுகள் ஏற்றுமதியை டிரம்ப் மீண்டும் தொடங்கினார்.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

போர் நிறுத்தம் அமலில் உள்ளபோதும், இஸ்ரேலுக்கு கனரக குண்டுகள் ஏற்றுமதியை டொனால்ட் டிரம்ப் மீண்டும் தொடங்கினார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 6 வாரத்துக்கு நிறுத்துமாறு ஒப்பந்தம் மேற்கொண்டதன்படி, இரு தரப்பினரும் தற்போது அமைதியாக உள்ளனர். இதற்கிடையே, இஸ்ரேலுக்கு கனரக குண்டுகளை (மார்க் 84) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழங்கியுள்ளார்.

மார்க் 84 ரக குண்டுகள் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இஸ்ரேலுக்கு மார்க் 84 குண்டுகளை வழங்குவதை முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிறுத்தி வைத்திருந்தார். ஏற்றுமதிக்கான தொகையை இஸ்ரேல் வழங்கியிருந்தும், அமெரிக்கா குண்டுகளை ஏற்றுமதி செய்யவில்லை என்று டிரம்ப் கூறினார்.

மார்க் 84 குண்டுகள் (சுமார் 900 கிலோ) வெடிக்கும் இடத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் இருக்கும் மனிதர்களையும் கொல்லும் அளவுக்கு திறனுடையது; மேலும், 800 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில்தான், போரில் ஏற்பட்ட அதிகளவிலான உயிரிழப்புகள் காரணமாக மார்க் 84 ரக குண்டுகள் ஏற்றுமதியை ஜோ பைடன் நிறுத்தினார். ஏற்றுமதியை நிறுத்துவதற்கு முன்னதாகவே, ஜோ பைடன் ஆட்சியில் சுமார் 14,000 மார்க் 84 குண்டுகள் உள்பட பல்வேறு வகையான குண்டுகளும் ஏவுகணைகளையும் அளிக்கப்பட்டன.

காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர், 2023-ல் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேரை பணயக் கைதிகளாகவும் பிடித்து வைக்கப்பட்டனர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில், காஸாவில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 20.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் இருந்து புலம்பெயர்ந்தனர்.

இந்த நிலையில்தான், ஓராண்டுக்கும் மேலான இஸ்ரேல் - காஸா போரை நிறுத்த அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் மேற்கொண்ட 6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஜனவரி 19 ஆம் தேதியிலிருந்து இரு தரப்பிலும் போர் நிறுத்தம் அமலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com