டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கோப்புப் படம்

டெஸ்லா காரை வாங்க வேண்டாம்: பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழு

எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்களை யாரும் வாங்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழுவினர் வலியுறுத்தல்
Published on

தீவிர வலதுசாரிக்கு ஆதரவளிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்களை யாரும் வாங்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரியா முதலான பல நாடுகளில் புலம்பெயர்ந்தோரை எதிர்க்கும் தீவிர வலதுசாரியினருக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். இதனிடையே, சமீபத்தில் கிழக்கு ஜெர்மனியின் ஹாலேவில் நடைபெற்ற தீவிர வலதுசாரி கட்சியான ஜெர்மனி மாற்று கட்சியின் பரப்புரையிலும் காணொலி மூலம் எலான் மஸ்க் உரையாற்றினார்.

இதற்கு முன்னதாக, எலான் மஸ்க்கின் செயலைக் குறிப்பிட்டு, ஜெர்மனியில் கருத்து சுதந்திரம் இருந்தாலும், தீவிர வலதுசாரியை ஆதரிப்பதை ஏற்க முடியாது என்று ஜெர்மன் அதிபர் ஓலப் ஸ்கோலஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தீவிர வலதுசாரியை ஆதரிக்கும் எலான் மஸ்க்கை எதிர்க்கும் விதமாக, அவரது நிறுவனத் தயாரிப்பு கார்களை வாங்க வேண்டாமென பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழுவினர் வலியுறுத்தினர்.

அதுமட்டுமின்றி, ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகேயுள்ள டெஸ்லா கார் தொழிற்சாலையின் சுற்றுச் சுவரில் ``எலான் மஸ்க்கால் ஐரோப்பிய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவரது டெஸ்லா நிறுவனக் கார்களை யாரும் வாங்க வேண்டாம். டெஸ்லா காரை நீங்கள் வாங்கினால், வலதுசாரியினருக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள் என்று பொருளாகிவிடும்’’ என்ற வாசகத்துடன் குறும்படத்தையும் திரையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com