ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

4 மாதங்களுக்கு ரூ. 824 கோடி ஊதியம் பெற்ற ஸ்டார்பக்ஸ் சிஇஓ!

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரி பிரையன் நிக்கோலுக்கு 4 மாதங்களுக்கு மட்டும் ரூ. 824 கோடி ஊதியமாக வழங்கியுள்ளது.

ஸ்டார்பக்ஸ் - கோப்புப் படம்

Published On :

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரி பிரையன் நிக்கோலுக்கு 4 மாதங்களுக்கு மட்டும் ரூ. 824 கோடி ஊதியமாக வழங்கியுள்ளது.

அமெரிக்க சந்தையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும் வகையிலான அவரின் பணியை அங்கீகரிக்கும் விதமாக இதனை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளது.

அமெரிக்காவில் வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தேநீர், காபி போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சிப்போட்லே மெக்சிகன் கிரில் கடந்த ஆண்டுடன் அப்பதவியில் இருந்து விடைபெற்றார். அவருக்குப் பிறகு பிரையன் நிக்கோல் கடந்த செப்டம்பர் மாதம் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் விற்பனை குறைந்திருந்த நிலையில், அதனை அதிகரிக்கும் நோக்கத்தில் பிரையன் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே அவர் பொறுப்பேற்ற சில மாதங்களில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் விருப்ப நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் மாறியது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஸ்டார்பக்ஸ் பானங்களை தனது பணியாளர்களுக்காக குத்தகை எடுத்தது. நிக்கோலின் உக்தியால் தற்போது உலகளாவிய நிறுவனமாகவும் ஸ்டார்பக்ஸ் மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு மட்டும் 96 மில்லியன் (ரூ. 827 கோடி) டாலரை நிக்கோலுக்கு ஊதியமாக வழங்கியுள்ளது ஸ்டார்பக்ஸ். இதோடு மட்டுமின்றி ஒப்பந்தம் கையெழுத்தான முதல் மாத இறுதியில் 5 மில்லியன் டாலரைக் கொடுத்துள்ளது.

தெற்கு கலிஃபோர்னியாவில் பிரையன் நிக்கோல் இருப்பதால், வாஷிங்டன் தலைமையகத்துக்கு அவர் வந்துசெல்லும் விமான செலவுக்காக 72,000 டாலரை வழங்கியுள்ளது. தனிப்பட்ட பயணங்களுக்காக நிறுவனத்தின் ஜெட் விமானத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்காக 19,000 டாலர்களை வழங்கியுள்ளது.

பிரையன் நிக்கோலின் ஆண்டு வருவாய் 113 மில்லியன் டாலராக கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவில் அதிக ஊதியம் பெரும் 20 தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவராக பிரையன் நிக்கோல் மாறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.