
மெலிண்டாவிடமிருந்து விவாகரத்து பெற்றதுதான், என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் குற்றவாளியுடனான நட்பு மற்றும் மெலிண்டாவிடமிருந்து விவாகரத்து பெற்றது குறித்து பில் கேட்ஸ் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
நான் என் வாழ்நாளில் எத்தனையோ தவறுகளை செய்திருக்கிறேன். ஆனால், 27 ஆண்டு கால திருமண வாழ்வை, மெலிண்டாவை விவகாரத்து செய்து முடிவுக்குக் கொண்டுவந்ததுதான் இருப்பதிலேயே மிக முட்டாள்தனமான தவறு. இவ்வளவுப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க, எனக்கு எனது குடும்பம் எந்த அளவுக்கு உதவியது என்பதையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பில் கேட்ஸ்.
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது கடந்தகால நட்பு, எனது வாழ்வில், நான் செய்த ஒரு பெரிய பிழை என்று பில் கேட்ஸ் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
தி வால் ஸ்ட்ரீட் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில்தான் பில் கேட்ஸ் இவற்றைக் கூறியிருக்கிறார்.
நடந்தவற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், அவருடன் என்னுடைய முழு நேரத்தையும் செலவிட நான் முட்டாள்தனமாக தயாராக இருந்தேன் என்றும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் ஒப்புக் கொண்டுள்ளார்.
எப்ஸ்டீன் உலகளாவிய சுகாதாரத்துக்கான தனது கொள்கைகளுக்கு உதவ முடியும் என்று நான் ஆரம்ப நாள்களில் நம்பியிருந்தது தவறானது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதாவது, நான் மிகவும் முட்டாள் என்று நினைக்கிறேன். உலகளாவிய சுகாதார சேவைக்கு நண்பராக இருந்த எப்ஸ்டீன் உதவி தேவைப்படும் என்று நம்பியிருந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிக்க.. அடுத்த 15 நாள்களுக்கு அயோத்தி வரவேண்டாம்: அறக்கட்டளை!
பாலியல் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த எப்ஸ்டீன், சக்திவாய்ந்த நபர்களை தனது மோசடி வலையில் சிக்க வைக்க தனது தொடர்புகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணையை எதிர்கொண்டிருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டபிறகு, நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தேன் என்றும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.