யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீன ஏஐ நிறுவனத்தால் அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி!

சீனா ஏஐ நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது

News image
டீப்சீக் லோகோ- எக்ஸ் புகைப்படம்
Updated On :28 ஜனவரி 2025, 7:55 am

DIN

சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீக், செயற்கை நுண்ணறிவு துறையில் (ஏஐ) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுவருவதன் எதிரொலியாக அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையில் இன்று சந்தித்த மிகப்பெரிய சரிவால், முதலீட்டாளர்கள் 82,000 கோடி ரூபாய் வரை நட்டம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவின் டீப்சீக் நிறுவனத்தின் வளர்ச்சியால், அமெரிக்காவின் மிக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவின் பங்குகள் 17 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. இது 560 பில்லியன் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க பங்குச் சந்தை, இன்று காலை வணிகம் தொடங்கியதும், என்விடியா பங்குகள் சரிவைக் கண்ட நிலையில், பங்குச் சந்தையும் சரிவுடன் வணிகமானது.

சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீக் தயாரித்த ஏஐ, செயற்கை நுண்ணறிவான சாட் ஜிபிடி, கூகுளின் ஜெமினி ஆகியவற்றை விடவும் சிறந்து செயல்படுவதாகவும், சீன நிறுவனம் விலை மலைவான ஏஐ சேவையை வழங்குவதும், புதிய போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததால் நாஸ்டாக் 5 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

என்விடியா கார்ப். பங்குகள் 12 சதவீத சரிவுடன் வணிகத்தைத் தொடங்கியது. டெல் டெக்னாலஜிஸ் 7.2 சதவீதமும் சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் 8.9 சதவீதமும் சரிவை சந்தித்தன.

அது மட்டுமல்லாமல், ஏஐ துறையில் இருக்கும் மைக்ரோசாஃப்ட், மெட்டா பிளாட்பார்ம்ஸ், ஆல்பபெட் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் 2.2 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

சீன தொடக்க நிறுவனமான டீப்சீக்கின் மலிவான செய்யறிவு தொழில்நுட்பமானது, அதே தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக பல கோடி ரூபாய் கணக்கில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடு செய்வது தொடர்பான முதலீட்டாளர்களின் முடிவை ஆய்வு செய்ய வைத்துள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் இந்த ஆய்வானது இந்த வாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்துறை முதலீடுகளின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்விடியாவின் குறைந்த-மேம்பட்ட எச்800 சிப்களைப் பயன்படுத்தி ஏஐ மாதிரியை உருவாக்க இரண்டு மாதங்கள் மற்றும் ஆறு டாலர் மில்லியனுக்கும் குறைவாகவே செலவாகும் என்று டீப்சீக் கூறியுள்ளது. வி3 மாடலால் இயக்கப்படும் ஒரு செயலி திங்கள்கிழமை அமெரிக்காவில் உள்ள ஐஃபோன்களில் சிறப்பாக பதிவிறக்கம் ஆனது.

2023-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தொழில்முனைவோருக்கான நிறுவனமான டீப்சீக், அதன் ஏஐ மாதிரிகள் விலையுடன் ஒப்பிட்டாலும், அமெரிக்காவின் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களைக் காட்டிலும் மலிவாகவும், சிறப்பாக செயல்படுவதாகவும் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு மிக அதிகத் திறன்கொண்ட கணினி மற்றும் முதலீடு தேவை என்ற விஷயத்துக்கும் சீன நிறுவனம் சவால் விடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.