ரூ. 216 கோடி கொடுத்து டிரம்ப்புடன் மார்க் ஜூக்கர்பெர்க் சமரசம்?

சுமார் 4 ஆண்டுகால வழக்கில் மார்க் ஜூக்கர்பெர்க் சமரசம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்
மார்க் ஜூக்கர்பெர்க் - டொனால்ட் டிரம்ப்
மார்க் ஜூக்கர்பெர்க் - டொனால்ட் டிரம்ப்
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடுத்த அவதூறு வழக்கில் மார்க் ஜூக்கர்பெர்க் சமரசம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் 2021 ஆம் ஆண்டில் கேபிடல் ஹில்லில் ஏற்பட்ட கலவரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வரை டிரம்ப் ஆதரவாளர்கள் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப்பின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கியது. இதனையடுத்து, மெட்டா நிறுவனம் மீது டொனால்ட் டிரம்ப் அவதூறு வழக்கு தொடுத்தார்.

தற்போது, டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான நிலையில், டிரம்ப்புடனான வழக்கை நீதிமன்றம் வாயிலாக அல்லாமல், சமரசத்துடன் தீர்க்க மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார்.

இதன்மூலம், அதிபர் டிரம்ப்புக்கு 25 மில்லியன் டாலர் (ரூ. 216.5 கோடி) வழங்க மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் 22 மில்லியன் டாலர் அதிபர் நூலகத்துக்கும், மீதமுள்ள கட்டணம், வழக்கு தொடர்பான செலவுகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும் பயன்படுத்த அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com