அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையம் செல்வதற்காக இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை அந்த திட்டத்தின் விமானியாக நாசா அறிவித்துள்ளது.
வருகின்ற ஜூன் மாதத்துக்குள் ‘ஆக்ஸியம் திட்டம் 4’ க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டத்தின் கீழ் இந்தாண்டு மனிதா்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னொட்டமாக, ககன்யான் திட்டத்தில் உள்ள ஒரு இந்திய விண்வெளி வீரரை சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்காக நாசாவுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்திருந்தது.
நாசாவின் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்வதற்காக இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டு, நாசாவுக்கு பயிற்சிக்காக கடந்தாண்டு அனுப்பப்பட்டிருந்தார்.
இதையும் படிக்க : விமான விபத்துக்கு ஒபாமா, பைடனின் கொள்கையே காரணம்: டிரம்ப்
இந்த நிலையில், வருகின்ற ஜூன் மாதத்துக்குள் முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமையில் நான்கு வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் விமானியாக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை நியமிப்பதாகவும், ஐரோப்பாவைச் சேர்ந்த இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்களும் சர்வதேவ விண்வெளி மையம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தைப் பார்வையிட்ட முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை சுக்லா படைக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க ஒப்பந்தம்

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் காற்று கசிவு: வீரா்களை வெளியேறத் தயாா்ப்படுத்திய நாசா

அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



