விமான விபத்துக்கு ஒபாமா, பைடனின் கொள்கையே காரணம்: டிரம்ப்

விமான விபத்து குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பு.
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் AP
Published on
Updated on
1 min read

பன்முகத்தன்மை கொண்டவர்களை விமானப் போக்குவரத்துத் துறையில் பணியமர்த்தியதே விபத்தில் யாரும் பிழைக்காததற்கு காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரா்களுடன் வந்த ராணுவ ஹெலிகாப்டரும் புதன்கிழமை இரவு மோதி வெடித்துச் சிதறியதில் 67 போ் உயிரிழந்தனா்.

இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 24 மணிநேரம் கடந்தும் யாரும் உயிருடன் மீட்கப்படாததால் அனைவரும் உயிரிழந்திருக்ககூடும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், விமான விபத்து குறித்து வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் பேசியதாவது:

"ஒபாமாவும் பைடனும் குடிமக்களின் பாதுகாப்புக்கு பதிலாக இடதுசாரி பன்முகத்தன்மை கொள்கைக்கு முன்னுரிமை அளித்தனர். இதனால் விமானப் போக்குவரத்துத் துறையி இருந்த திறமையான ஊழியர்களை வெளியேற்றினர்.

2016இல் நான் அதிபரானபோது விமானப் போக்குவரத்தின் தரத்தை அசாதாரணம் கொண்டதாக மாற்றினேன். அறிவுத்திறன் மற்றும் உளவியல் ரீதியில் மேம்பட்டவர்களை மட்டுமே விமான கட்டுப்பாட்டாளர்களாக தேர்ந்தெடுக்க அனுமதித்தேன்.

ஆனால், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முன்பைவிட தரம் குறைவானதாக விமானத் துறையை மாற்றினார்.

இந்த விமான விபத்தானது பயணிகள் விமானத்தின் பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் சென்றதால்தான் நடந்தது. இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்” என்றார்.

பொடோமேக் ஆற்றின் 2 செல்சியஸ் தட்பவெட்பநிலை நிலவியதால், மீட்பு நடவடிக்கைகள் தாமதம் ஆகியுள்ளது. இதுவரை 28 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் குறித்து வாஷிங்டன் தீயணைப்புத் தலைவர் ஜான் டோனெல்லி கூறுகையில், உயிருடன் மீட்கும் நிலையிலிருந்து உடலை மீட்கும் நடவடிக்கைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com