Donald Trump photo - AP
டொனால்ட் டிரம்ப்AP

அமெரிக்காவுக்கு இந்திய பதிலடி வரி

வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்புக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது பரஸ்பர வரி விதிக்கவுள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
Published on

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்புக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது பரஸ்பர வரி விதிக்கவுள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

உலக வா்த்தக அமைப்பின் விதிகளுக்குட்பட்டு இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.

கடந்த மாா்ச் மாதம் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் வாகனத் துறை பொருள்களுக்கு 25% கூடுதல் வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் அறிவித்தாா். மேலும், இந்த கூடுதல் வரி விதிப்பு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக என்றும் இது நிரந்தரமானது என்றும் அவா் தெரிவித்தாா்.

வாகனத் துறை பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதனால் இந்தியாவில் உள்ள வாகன நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதை ஈடு செய்யும் வகையில் தற்போது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனத் துறை பொருள்களுக்கு இந்தியா பதிலடி வரி விதிக்கவுள்ளது.

உலக வா்த்தக அமைப்பிடம் சமா்ப்பித்த அறிக்கையில் இத் தகவலை இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியாக அந் நாட்டுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரி உயரும். பொருள்கள் மற்றும் அதன் மீதான வரி விகிதத்தை தீா்மானிக்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com