ரஷியா தோற்றால், அடுத்தது நாம்தான்! அமெரிக்காவால் சீனா அச்சம்?

ரஷியா - உக்ரைன் போர் முடிவடைந்தால், அமெரிக்காவின் கவனம் சீனாவின் பக்கம் திரும்பி விடும் என்று சீன அமைச்சர் பேச்சு
ரஷியா தோற்றால், அடுத்தது நாம்தான்! அமெரிக்காவால் சீனா அச்சம்?
ENS
Published on
Updated on
1 min read

ரஷியா - உக்ரைன் போர் முடிவடைந்தால், அமெரிக்காவின் கவனம் சீனாவின் பக்கம் திரும்பி விடும் என்று சீன அமைச்சர் கூறியுள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை எதுவும் ஒரு முடிவைக் கொண்டு வரவில்லை.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசுகையில், உக்ரைனுடனான போரில் ரஷியா தோல்வியடைவதை சீனா விரும்பவில்லை. ஏனெனில், ரஷியா தோல்வியடைந்தால், அதன் பின்னர் சீனாவின் பக்கம் அமெரிக்காவின் முழுக் கவனமும் திரும்பி விடும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வாங் யி-யின் கருத்துகள் குறித்து சீனாவின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், ரஷியாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவ்வாறு இருந்தால், போர் இதுவரை நீண்டிருக்காது என்று கூறினார்.

Summary

China fears US will turn focus on it

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com