வட கொரியாவுக்கு ஸ்கெட்ச் போடும் 3 நாடுகள்! துணைநிற்கும் ரஷியா!

வட கொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகை நடவடிக்கைக்கு ரஷியா எச்சரிக்கை
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

வட கொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகை நடவடிக்கைக்கு ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்துவதால், அவ்வப்போது பதற்றத்தைத் தூண்டுகின்றது.

இந்த நிலையில் தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் ஒன்றாக சேர்ந்து கூட்டுப் போர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 3 நாடுகளின் ஒத்திகை நடவடிக்கையானது, தங்களுக்கு எதிரானது என்று வட கொரியா கருதுகிறது. மேலும், போர் ஒத்திகையைக் கைவிடக் கோரி, வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்த நிலையில், வட கொரியாவுக்கு சென்றிருந்த ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவும், வட கொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகையை கைவிட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியா - வட கொரியா இடையிலான நட்புறவு தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், இரு நாடுகளும் தங்களுக்குள்ளாக பல்வேறு உதவிகளை மாற்றிக் கொள்கின்றனர்.

ரஷியா வழங்கும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிக்கு ஈடாக, உக்ரைனுடனான போரில் ரஷியாவுக்கு வீரர்களையும் வெடிபொருள்களையும் வட கொரியா வழங்கி வருகிறது. இதனிடையே, தங்களின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களின் தொழில்நுட்பங்களையும் வட கொரியாவுக்கு ரஷியா வழங்குமா? என்ற கவலையும் எழுகிறது.

இதையும் படிக்க: திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

Summary

Russia warns US, South Korea, Japan against alliance targeting North Korea

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com