
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை(ஜூலை 14) எச்சரித்துள்ளார். இதற்கு ரஷிய தரப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) எதிர்வினையாற்றப்பட்டுள்ளது.
50 நாள்களுக்குள் போரை நிறுத்தாவிட்டால், சண்டை நிறுத்தத்திற்கானதொரு ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் வரி விதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
இந்தநிலையில், ரஷியா மீதான எந்தவித பொருளாதார தடைகளையும் வரி விதிப்பு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள ரஷியா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லேவ்ரோவ் சீனாவின் டியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான 25-ஆவது ஆலோசனையில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.