இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சிப்படை பொறுப்பேற்பு... (கோப்புப் படம்)
இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சிப்படை பொறுப்பேற்பு... (கோப்புப் படம்)ஏபி

இஸ்ரேல் தலைநகரில் ஏவுகணைத் தாக்குதல்: யேமனின் ஹவுதிகள் பொறுப்பேற்பு!

48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஹவுதிகள் நடத்திய மற்றொரு ஏவுகணைத் தாக்குதல் குறித்து...
Published on

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவவில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை பொறுப்பேற்றுள்ளது.

டெல் அவிவில் உள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது நேற்று (ஜூலை 18) இரவு ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மூலம் தாக்குதல் நடத்தியதாக, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை கூறியுள்ளது.

இதுகுறித்து, ஹவுதிகளின் செய்தித் தொடர்பாளர், யஹ்யா சரீயா கூறுகையில், பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறையை எதிர்த்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, முடக்கங்கள் விலக்கப்படும் வரையில், தங்களது ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, டெல் அவிவ் மீது யேமனில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை முறியடித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.

ஏற்கனவே, கடந்த ஜூலை 16 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில், 48 மணி நேரத்தில் தற்போது புதியதொரு தாக்குதலை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்கா: காவலர் பயிற்சி மையத்தில் வெடி விபத்து! 3 அதிகாரிகள் பலி!

Summary

Yemen's Houthi rebels have claimed responsibility for a missile attack on the airport in the Israeli capital Tel Aviv.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com