
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள காவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வெடி விபத்தில், 3 அதிகாரிகள் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலிஃபோர்னியாவின், லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்திலுள்ள காவலர் பயிற்சி மையத்தில், அதிகாரிகள் சில வெடி பொருள்களைக் கொண்டு நேற்று (ஜூலை 18) பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, காலை 7.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெடிப்பில் 3 அதிகாரிகள் பலியானதாக, அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, உடனடியாக அங்கு மீட்புப் படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் கரண் பாஸ் கூறுகையில், அந்நகர தீயணைப்புப் படை, ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பயிற்சி மையத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கலிஃபோர்னியாவில் 40 ஆண்டுகளில் முதல்முறையாக அரசுப் படையின் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நாட்டு அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: இஸ்ரேல் மீதான புதிய ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு! விமான நிலையம் தற்காலிக மூடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.