தெற்கு பசிபிக் கடலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 ஆகப் பதிவு!

தெற்கு பசிபிக் பெருங்கடலில் தீவு நாடான சமோவா அருகே நிலநடுக்கம்..
சமோவா அருகே நிலநடுக்கம்
சமோவா அருகே நிலநடுக்கம்
Published on
Updated on
1 min read

தெற்கு பசிபிக் பெருங்கடலில் தீவு நாடான சமோவா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் அபியாவிலிருந்து தென்மேற்கே 440 கிலோமீட்டர் (273 மைல்) தொலைவில் 314 கிலோமீட்டர் (195 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ரிக்டர் அளவில் 6.6 அலகுகளாகப் பதிவானது.

ஹொனலுலுவில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று மதிப்பிட்டுள்ளது.

சமோவா "நெருப்பு வளையத்தில்" அமைந்துள்ளது, இது பூகம்பங்கள் மற்றும் எரிமலைகள் அடிக்கடி நிகழும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வு பிளவுகளின் வளைவாகும்.

Summary

A magnitude-6.6 earthquake struck in the South Pacific near the island nation of Samoa on Friday, but caused no apparent damage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com