
பிரான்ஸில் இருந்து படகு மூலகமாக இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற நபர் பலியானார்.
வடக்கு பிரான்ஸில் உள்ள கடற்கரையிலிருந்து இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற நபர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பவுலோன்-சர்-மெர் நகருக்கு அருகிலுள்ள எக்விஹென் கடற்கரைக்கு அருகில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டார்.
தீயணைப்பு வீரர்கள் அவரை உயிர்ப்பிக்க முயன்ற போதிலும் அவர் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனை அடைய முயன்று பிறகு பிரெஞ்சுக் கரையை நோக்கித் திரும்பிய அவருக்கு படகில் மாரடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடல் வழியாக பிரிட்டனை அடைய முயன்ற 18 பேர் பலியாகியுள்ளதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.