
காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில், சுமார் 46 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காஸாவில் நேற்று (ஜூலை 29) நள்ளிரவு முதல் இன்று (ஜூலை 30) அதிகாலை வரை இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் உணவுக்காகத் திரண்டிருந்த 30 பேர் உள்பட 46 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்குதலில் உயிர்பிழைத்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து, இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கிளர்ச்சியாளர்களை மட்டும் குறிவைத்ததாகவும், மக்கள் கொல்லப்பட்டதற்கு ஹமாஸ் படையினர்தான் காரணம் என்றும் இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இத்துடன், உடனடியாகப் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது கூடுதல் வரி: வெளிப்படையாக அறிவித்த டிரம்ப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.