
உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் எல்லையில், இருநாட்டு படைகளும் இடையிலா துப்பாக்கிச் சூடு மோதலில், சுமார் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு சூடானின் ராணுவப் படைகள், கடந்த ஜூலை 28 ஆம் தேதியன்று உகாண்டா ராணுவத்தினர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், உகாண்டா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு, பதிலடியாக உகாண்டா ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில், 3 தெற்கு சூடான் வீரர்கள் கொல்லப்பட்டதாக, உகாண்டா ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தெற்கு சூடானின் அதிகாரிகள் தாக்குதலில் பலியான 5 வீரர்களின் உடல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
முன்னதாக, வடமேற்கு உகாண்டாவின் வெஸ்ட் நைல் பகுதியில், எல்லையைக் கடந்து வந்து தெற்கு சூடான் படையினர் முகாமிட்டு அங்கிருந்து வெளியேற மறுத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், அவர்களின் மீது உகாண்டா ராணுவம் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒப்புக்கொண்டதன் மூலம் சண்டை நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தெற்கு சூடானின் அதிபர் சால்வா கீர் தலைமையிலான அரசு படைகளுக்கும், அந்நாட்டின் துணை அதிபர் ரெயிக் மச்சாரின் ஆதரவுப் படைகளுக்கும் இடையில் மோதல் நிலவி வருகின்றது.
இதில், அதிபர் சால்வா கீர்-க்கு ஆதரவாக உகாண்டா அரசு தனது படைகளை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்! பிரான்ஸ் உள்பட 15 நாடுகள் வலியுறுத்தல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.