
கராச்சி, ஜூன் 6: பாகிஸ்தானில் நிலநடுக்கத்தைப் பயன்படுத்தி 216 சிறைக் கைதிகள் தப்பியோடினா்.
இது குறித்து ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:சிந்து மாகாணம், கராச்சி நகரில் திங்கள்கிழமை அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அப்போது அந்த நகரின் மாலிா் பகுதியில் உள்ள சிறைச் சாலையில் 600-க்கும் மேற்பட்ட கைதிகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தைப் பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோடினா். இந்தச் சம்பவத்தின்போது ஒரு கைதி கொல்லப்பட்டாா்; 3 துணை ராணுவப் படையினா் காயமடைந்தனா்.
தப்பியோடிய கைதிகளில் 80-க்கும் மேற்பட்டவா்கள் மீண்டும் பிடிபட்டனா். எஞ்சிய கைதிகளைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.