இந்தியாவைத் துண்டு துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!

இந்தியாவை துண்டு துண்டாக்குவோம் என்று மிரட்டல் விடுத்த லஷ்கர் பயங்கரவாதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.
பயங்கரவாதிகள் - கோப்புப்படம்
பயங்கரவாதிகள் - கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் ஆஸிஸ் எசார் என்ற பயங்கரவாதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை நேரத்தில், அப்துல் ஆஸிஸ், மர்மமான முறையில், மரணமடைந்து கிடந்ததாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

ஐஎஸ்ஐ அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஜெய்ஸ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதிகள் ஒவ்வொருவராக அண்மைக் காலமாக மர்மமான முறையில் இறந்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், ஜூன் 2ஆம் தேதி அப்துல் ஆஸிஸ் பலியானதாகவும், அவரது இறதிச் சடங்குகள் பயங்கரவாத அமைப்பின் பஹவல்பூர் தலைமையகத்தில் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, மிக மோசமாக பாதிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களில் ஒன்றாக பஹவல்பூர் தலைமையகம் இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்பட 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்த இடத்திலிருந்துதான் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டெலிகிராம் வழியாக, ஜெய்ஷ் அமைப்பினர், அப்துல் ஆஸிஸ் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறினாலும், அதிகாரப்பூர்வமாகவோ, பாகிஸ்தான் காவல்துறையோ அவ்வாறு தெரிவிக்கவில்லை. மர்ம மரணம் என்றே குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவை துண்டு துண்டாக்குவோம் என்றும், இந்தியாவுக்கு எதிராக மிக மோசமான மிரட்டல்களை விடுப்பதன் மூலமும் மிகவும் பிரபலமானவர் அப்துல் ஆஸிஸ். இந்தியாவிடமிருந்து காஷ்மீரை பிடுங்கிவிடுவோம் என்று கடந்த மாதம் நடந்த பயங்கரவாதப் பேரணியில் கூட பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், முஜாஹிதீன் பயங்கரவாதிகள் வருகிறார்கள், உங்களால் முடித்தால் தடுத்துப் பாருங்கள். இல்லாவிட்டால், அவர்கள் காஷ்மீரை உங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்வார்கள். முஜாஹிதீன் பயங்கரவாதிகள் கிளம்பிவிட்ர் என்று பேசி விடியோ வெளியிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com