டிரம்ப் குறித்து அப்படி பேசியதற்கு வருந்துகிறேன்: எலான் மஸ்க்

டிரம்ப் குறித்து பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார் தொழிலதிபர் எலான் மஸ்க்
எலான் மஸ்க் - அமெரிக்க அதிபர் டிரம்ப்
எலான் மஸ்க் - அமெரிக்க அதிபர் டிரம்ப்AP
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பாக தான் தெரிவித்த சில கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி நான் கூறிய சில கருத்துகளுக்காக நான் மனம் வருந்துகிறேன். அவை, மிகவும் மோசமான கருத்துகள் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவு செய்திருக்கிறார்.

தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும், கடந்த வாரம், பொது வெளியில் பகிரங்கமாக கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சமடைந்து, இருவரையும் மாறி மாறி பகிரங்கமாக பொது வெளியில் பேசிக்கொண்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதிபரானதும், அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான டிபாா்ட்மென்ட் ஆஃப் கவா்ன்மென்ட் எஃபிஷியன்ஸி (‘டோக்’) என்ற துறையை உருவாக்கி அதற்கு எலான் மஸ்கை தலைவராக்கி அழகுபார்த்தார் டிரம்ப்.

இதையும் படிக்க.. இப்படி ஒரு ஃபோன் சார்ஜரா? வந்துவிட்டது போர்டபிள் சார்ஜர்! அறிய வேண்டிய 10 அம்சங்கள்!!

இரு நண்பர்களும் சேர்ந்து அமெரிக்க ஆட்சியை நடத்திக்கொண்டிருந்த நிலையில்தான், இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. டோக் துறையின் தலைமையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் கடந்த மே 29-ஆம் தேதி திடீரென அறிவித்தார்.

இந்த நிலையில்தான், டிரம்ப் கொண்டு வந்த வரி விதிப்பு மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவு செய்து வந்தார். இதனால், இவர்களது சண்டை வெளிச்சத்துக்கு வந்தது.

டிரம்ப்பும், மஸ்கின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அவரது விமா்சனங்களை மறுத்தாா். மஸ்கின் பங்களிப்பு இல்லாமல் தனது அரசு வெற்றிகரமாக செயல்படும் என்றார். மேலும், எலான் மஸ்குக்குச் சொந்தமான டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தனது அரசின் ஆதரவை இழக்கலாம் என்று டிரம்ப் எச்சரித்தார்.

தான் இல்லாவிட்டால் டிரம்ப் அதிபராகியிருக்க முடியாது என்று நேரடியாகக் கூறியதோடு, விண்வெளித் தயாராப்பான டிராகனை நிறுத்திவிடுவேன் என்று எலான் மஸ்க் எச்சரித்திருந்தார்.

இந்த பதிலுக்கு பதில் தாக்குதல் கடந்த வாரம் முழுக்க சூடுபிடித்திருந்த நிலையில், திடீரென எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

டிரம்ப நன்றி கெட்டவர் என்றும், பாலியல் குற்றவாளியின் ஆவணம் வெளியிடப்படாததற்கு அதில் டிரம்ப் பெயர் இருந்ததே காரணம் எனவும் எலான் மஸ்க் சரமாரியாகக் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com