எத்தியோப்பியன் விமானம்
எத்தியோப்பியன் விமானம்

எத்தியோப்பியா தலைநகர் - ஹைதராபாத் விமான சேவை துவக்கம்!

அடிஸ் அபாபா - ஹைதராபாத் இடையில் சர்வதேச விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.
Published on

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா மற்றும் தெலங்கானாவின் ஹைதராபாத் ஆகிய இருநகரங்களுக்கு இடையில் சர்வதேச விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்தை நிர்வாகிக்கும் ஜி.எம்.ஆர். குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (ஜூன் 17) முதல் ஹைதராபாத்திலிருந்து அடிஸ் அபாபாவுக்கு சர்வதேச விமானம் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் மூலம் துவங்கப்பட்டுள்ள இந்தச் சேவையின் முதல் விமானம் இன்று புறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையில் வெறும் 6 மணிநேரம் 25 நிமிட பயணத்தில், வாரம் 3 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இந்தப் புதிய விமானப் பாதையின் மூலம், இரு நாட்டு மக்களும் சுலபமாகப் பயணிப்பதுடன்; கலாசாரம் , சுற்றுலா, பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஹைதராபாத் மற்றும் அடிஸ் அபாபா நகரங்கள் மிகுந்த வளர்ச்சியடைய முடியும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: சிறைக்கைதியை முன்கூட்டியே விடுவிக்கும் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com