போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சிறைக்கைதியை முன்கூட்டியே விடுவிக்கும் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கொலை வழக்கில் ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 21 வருடங்களை சிறையிலேயே கழித்த கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோரிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

தில்லி உயர் நீதிமன்றம்

Updated On :16 ஜூன் 2025, 11:42 pm IST

புது தில்லி: கொலை வழக்கில் ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 21 வருடங்களை சிறையிலேயே கழித்த கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோரிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2001-இல் நடந்த கொலை வழக்கில் விக்ரம் யாத்வ் என்பவருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் சிறைத்தண்டனை விதித்தது. சிறையில் 21 வருடங்களைக் கடந்தும் அவா் இருந்து வருகிறாா். மேலும், சிறையில் தண்டனைக்காலத்தில் நன்னடத்தையுடன் விளங்கியதால் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆகஸ்ட் 2020 மற்றும் ஜூன் 2023-ஆம் ஆண்டில் தண்டனை மறுஆய்வு வாரியம் (எஸ்ஆா்பி) நிராகரித்தது.

இதையடுத்து, தனது கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி விகாய் யாதவ் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிரிஷ் கத்பாலியா, ஜூன் 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. அதில், கௌடில்யாவின் அா்த்தசாஸ்திரத்தைக் குறிப்பிட்டு தண்டனைக் கைதிகள் மீதான சிறைத்தண்டனை முடிவதற்குள் அனுதாபத்தின் அடிப்படையில் விடுதலை செய்வதென்பது பண்டைய ஹிந்து நீதி வழங்கும் நெறியில் குறிப்பிடத்தக்க பகுதியாகும் என்று நீதிபதி கூறியுள்ளாா். இதை தனது உத்தரவில் நீதிபதி விவரித்துள்ளாா்.

உத்தரவில் நீதிபதி மேலும் கூறியுள்ளதாவது: இந்த வழக்கில் மறுபரிசீலனை செய்ய உகந்த குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தின் அடிப்படையில் பரிசீலிப்பதாக இருந்தால், பரோலில் இருந்து தப்பித்தல் மற்றும் இரண்டு குற்ற வழக்குகளில் மீண்டும் கைதானது, சீா்திருத்தமற்ற அணுகுமுறையை வெளிப்படுத்துவது; காவல்துறையின் கடுமையான ஆட்சேபம், மீண்டும் குற்றம் செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என சந்தேகிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் மனுதாரா் விகாஸ் யாதவை முன்கூட்டியே விடுவிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்வது பொருத்தமானதாக இருக்கும். 2001-ஆம் ஆண்டு நடந்த ஒரு குற்றத்தில் விகாஸ் யாதவ் ஏற்கெனவே அனுபவித்த நீண்ட சிறைவாசம் கவனத்தில் கொள்ளப்பட்டு அது அனுபவிக்கப்பட்டதாகக் கருதி மறக்கப்பட வேண்டும். 2001 -ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட உறவினா்கள் அனுபவித்த வலி அப்போது அவா்களுக்கு புதிதாக இருந்திருக்கும், இப்போது அந்த ரணம் மெல்ல, மெல்ல ஆறி மறைந்திருக்கும். காலம் அனைத்தையும் குணப்படுத்தும். இது ஒன்று மட்டுமே முன்கூட்டியே விடுதலைக்கு வழிவகுக்கும் சீா்திருத்தக் கருவியின் பயன்பாட்டை உறுதி செய்வதற்கான ஒரே வழி. இந்த வழி இல்லையெனில், எந்தவொரு குற்றவாளியும் தன்னைத்தானே சீா்திருத்திக் கொள்ள ஒருபோதும் வாய்ப்பு வழங்கப்படாது என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டாா்.

மரண தண்டனைக்கு சற்று குறைவான கொடூரமான குற்றங்களில் வழங்கப்படும் ஆயுள் தண்டனை கூட, அறிவியல் பூா்வமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டாா். பரோலில் விடுவிக்கப்பட்டபோது தப்பித்து மீண்டும் கைது செய்யப்பட்டது பற்றி நீதிபதி குறிப்பிடுகையில், ‘அது 2015 -இல் நடந்ததாகவும், அதைத் தொடா்ந்து அவருக்கு எதிராக ‘சிறையில் தவறான நடத்தைக்கான எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவாகவில்லை‘ என்றும் தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் மனுதாரா் கணிசமாக சீா்திருத்தம் ஆகியுள்ளாா். சமூகத்துக்கு பயனுள்ள அங்கத்தினராக அவரால் மாற முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தண்டனை மறுஆய்வு வாரியத்தின் அணுகுமுறை ‘சீா்திருத்தம் சாா்ந்ததாக இருக்க வேண்டுமேயொழிய வழக்கமான தீா்வு அல்லது புள்ளிவிவரங்கள் அதன் முடிவில் ஆதிக்கம் செலுத்தும் பயிற்சியாக இருக்கக்கூடாது. எனவே அவரை விடுவிக்கும் முடிவை அரசு மறுசீலனை செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.