தெஹ்ரான்: எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்!

தெஹ்ரானில் எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைப் பற்றி...
தெஹ்ரான்: எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்
தெஹ்ரான்: எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்
Published on
Updated on
1 min read

ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கச்சா எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை இஸ்ரேல் குறிவத்து தாக்கி வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சண்டை 6-வது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒத்துழைக்காமல் சண்டையிட்டு வருகின்றன.

ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கனடாவில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டிலிருந்தும் திடீரென வெளியேறினார். ஈரானில் உள்ள 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் மேலும் விரிவடையக் கூடும் என்ற அச்சத்தில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இரு நாடுகளும் தாக்குதலை தொடருவதால் ஈரான் தலைநகா் தெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்திருந்தது மட்டுமின்றி, ஈரானை அமெரிக்காவும் தாக்க வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை வைத்திருந்தது.

அமெரிக்காவின் ஆதரவுடன் பங்கர் - பஸ்டர் குண்டுகளைக் கொண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கி அழிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக இஸ்ரேலிய ஆயுதப்படைகள் தெஹ்ரானுக்கு அருகில் வடகிழக்கு நகரமான தாஜ்ரிஷில் கச்சா எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை குறிவத்து தாக்கி வருகின்றன. இதனால், தீப்பிழம்புகள் வெளியேறும் விடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேலை நோக்கி ஈரானும் சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதால் டெல் அவிவிலும் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com