ஆபரேஷன் சிந்து..! இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை!

இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையைப் பற்றி...
காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்...
காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்...
Published on
Updated on
1 min read

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் உலகளவில் நிச்சயமற்றத் தன்மை அதிகரித்துள்ளது. ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த வார இறுதியில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.

ஈரானில் இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலில், சிக்கியவர்களில் முதல் கட்டமாக 110 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மோதல் நீடித்தால், மீட்பு நடவடிக்கை வரும் நாள்களில் மேலும் தீவிரமடையும் என்று எதிா்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரிட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள இந்திய தூதரகத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக ட்ள்ளனர். தாயகம் திரும்பவுள்ள மாணவர்களுக்கு தூதரகம் தேவையாக உதவிகளைச் செய்யும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவிக்கு https://www.indembassyisrael.gov.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், டெல் அவிவ்வில் உள்ள இந்திய தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். எண்கள்: 972 54-7520711, 972 54-3278392.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com