
கனடாவில் இந்திய மாணவி மர்மமான முறையில் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்யா தியாகி என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவி உயர் படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார். இவர் கடந்த ஜூன் 17ஆம் தேதி மர்மமான முறையில் பலியானார்.
இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்று இதுவரையில் தெரியவில்லை.
இதுகுறித்து கனடாவுக்கான இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், கால்கரி பல்கலைக்கழக இந்திய மாணவி தன்யா தியாகியின் திடீர் மறைவால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
பலியானோரின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகளை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.