பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hot air balloon incident kills eight in Brazil
ஹாட் ஏர் பலூன்.
Published on
Updated on
1 min read

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கத்தரினாவில் 21 பேரை ஏற்றிச் சென்ற சுற்றுலா ஹாட் ஏர் பலூன் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். பைலட் உள்பட 13 பேர் படுகாயங்களுடன் உயர் பிழைத்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். உடனே பலூனை பைலட் கீழே இறக்க முயன்றபோது பாதிக்கு மேற்பட்டோர் குதித்துத் தப்பியுள்ளனர். பயணிகள் கூடையில் தீப்பற்றவே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“நாங்கள் துக்கத்தில் இருக்கிறோம். ஒரு சோகம் நடந்துள்ளது. என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதைப் பார்ப்போம். ஆனால் இப்போது முக்கியமான விஷயம் என்னவென்றால், மாநில அமைப்பு தன்னால் முடிந்ததைச் செய்வதுதான்,” என்று சாண்டா கத்தரினாவின் ஆளுநர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து அனைத்து செயல்பாடுகளையும் காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக ஹாட் ஏர் பலூன் நிறுவனமான சோப்ரேவோர் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம்! அமெரிக்காவுக்கு பிரிட்டன் ஆதரவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com