சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மத்திய கிழக்கில் பதற்றம்! அமெரிக்காவுக்கு பிரிட்டன் ஆதரவு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஈரானுக்கு பிரிட்டன் அழைப்பு

News image

AP

Updated On :22 ஜூன் 2025, 7:20 am

மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஈரானுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் சூழலும் ஏற்படலாம்.

இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி ஆயுதத்துக்கு பிரிட்டன் பிரதமரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ``ஈரானின் அணுசக்தி திட்டமானது, சர்வதேச பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அந்த அச்சுறுத்தலைத் தணிக்கவே அமெரிக்காவும் தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியின்மையும் போர்ப் பதற்றமும் நிலவி வருகிறது. ஆகையால், ஈரான் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு, இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒரு ராஜதந்திர தீர்வையும் மேற்கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஈரான் ஆதரிப்பதாகக் கூறி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலால், உலக நாடுகளிடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, மீண்டும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.