
அமெரிக்கா தொடங்கிய போரை முடித்து வைப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளிப்பதாகக் கூறி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.
மேலும், அமைதிப் பாதைக்கு ஈரான் திரும்பாவிடில், எஞ்சியுள்ளவற்றையும் அமெரிக்கா அழித்து விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா தொடங்கிய போரை, தாங்கள் முடித்து வைப்பதாக ஈரானும் பதிலுக்கு எச்சரிக்கை விடுத்ததாக ஈரான் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷியாவும் மத்திய கிழக்கு நாடுகளும் களமிறங்கும் வாய்ப்புகள் இருப்பதால், உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படிக்க: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்! மூன்றாம் உலகப் போரின் தொடக்கமா? உலக நாடுகள் பதற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.