மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளில் உறுப்பு நாடுகளை ஈடுபடுத்தப்படுவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து, பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தினர். பதிலடியாக ஈரானும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலுக்கு மற்றைய நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவின் பிரதிநிதி ஃபு காங் பேசுகையில், "மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளில் உறுப்பு நாடுகளை அனுமதிப்பது என்பது சட்டவிரோதமான மற்றும் கண்மூடித்தனமான படைகளின் பயன்பாட்டைச் சட்டப்பூர்வமாக்குவதற்குச் சமம்.
ராணுவ நடவடிக்கைகளின் அடிப்படையில் எந்தவொரு பிரச்னையையும் தீர்க்க முடியாது. மேலும், மோதலைத் தீவிரப்படுத்துவது எந்தத் தரப்பினரின் நலனுக்கும் பாதிப்பைத்தான் விளைவிக்கும்" என்று தெரிவித்தார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்துகளுக்கு மத்தியில், சீனா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
China opposes use of force in Middle East, warns it would legitimise unlawful action: UN envoy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா

ஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது சீனா!

ஈரான் போர்: நாடு திரும்பிய 6 லட்சம் இந்தியர்கள்!

அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

