
ஈரானின் மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
இன்று காலை இஸ்ரேலை நோக்கி ஈரான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதனை இஸ்ரேல் வீரர்கள் தகர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா நேற்று (ஜூன் 21) இரவு தாக்குதல் நடத்திய நிலையில், மேற்கு ஈரானில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
''மேற்கு ஈரானில் உள்ள ராணுவ முகாம்களைக் குறிவைத்து தொடர் வான்வெளித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. கூடுதலாக இன்று காலை ஈரான் வீரர்கள் அனுப்பிய ஏவுகணைகளையும் வான்வெளி எல்லையிலேயே வைத்து இஸ்ரேல் தகர்த்தது'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.
24 மணிநேரத்தில் நடந்த தாக்குதல்
மற்றொரு பதிவில் கடந்த 24 மணிநேரத்தில் ஈரானின் உள்கட்டமைப்புகளில் இஸ்ரேல் வான்வெளிப்படை நடத்திய தாக்குதல் குறித்தும் பதிவிடப்பட்டுள்ளது.
அதில், ''ஈரானின் டெஸ்புல் பகுதியில் உள்ள விமான நிலையத்தின் அருகே ஈரானுக்குச் சொந்தமான இரண்டு எஃப் - 5 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.
இஸ்ரேலை நோக்கித் தாக்குதவதற்கு தயாராக இருந்த 6 லாஞ்சர்கள் உள்பட 8 லாஞ்சர்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன.
ராணுவ தளவாடத்தில் இருந்த 20க்கும் அதிகமான ஜெட் ரக போர் விமானங்கள் மீதும், வெடி பொருள்கள் உற்பத்தி தளவாடத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரான் விமானப் படைக்குச் சொந்தமான ராணுவ உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் இஸ்ஃபஹான் விமான நிலையம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது'' என இஸ்ரேல் பதிவிட்டுள்ளது.
இதையும் படிக்க | இஸ்ரேல், செளதி பங்குச் சந்தை உயர்வு! ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.