ஈரானைத் தொடர்ந்து கத்தாருக்கு அச்சுறுத்தலா?

ஈரான் தாக்குதல் எதிரொலி: கத்தார் தனது வான்வெளியை மூடுவதாக அறிவிப்பு
 அல் உதெய்த் விமான தளம்
அல் உதெய்த் விமான தளம் AP
Published on
Updated on
1 min read

கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தாக்குதல் எதிரொலியாக கத்தார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, கத்தாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது பதற்றமான சூழலை பிரதிபலிக்கவில்லை எனவும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் நட்பு நாடான கத்தாருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கத்தாரில் இருந்த படைகளையும் அமெரிக்கா திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கத்தார் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மஜித் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''கத்தாரில் உள்ள வெளிநாட்டினருக்கு அந்நாட்டு தூதரகங்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. கத்தாரில் பாதுகாப்பான இடங்கள் குறித்தும், பயணங்களை புறக்கணிப்பது குறித்தும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

இவை பொதுவான அரசியல் நிர்வாகம் சார்ந்தவை மட்டுமே அன்றி, குறிப்பிடத்தகுந்த அச்சுறுத்தலை பிரதிபலிக்கவில்லை. கத்தாரின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.

பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், துறை சார்ந்த வல்லுநர்கள், அதிகாரிகள் தொடர்ந்து எல்லைப் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை கத்தாரில் உள்ள அமெரிக்க குடிமக்கள் தங்கள் இடங்களிலேயே தங்குமாறு தூதரகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடுமட்டுமின்றி காத்தாரிலுள்ள தோஹாவின் தென்மேற்கே உள்ள இரண்டு ராணுவ தளங்களில் அல் உதெய்த் விமான தளத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 10,000 வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | ஈரானுடன் போர்: இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் வருகை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com