இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால், அதை மதிப்போம்: ஈரான்

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால் அதனை ஈரான் மதிக்கும் என அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
மசூத் பெஷேஷ்கியன்
மசூத் பெஷேஷ்கியன் AP
Published on
Updated on
1 min read

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால் அதனை ஈரான் மதிக்கும் என அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாக நடைபெற்றுவந்த மோதல் இன்றுடன் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இனி இரு நாடுகளும் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

எனினும், அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பையும் மீறி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை நிறுத்தினால், ஈரானும் பதில் தாக்குதலை நிறுத்தும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அர்காச்சி தெரிவித்திருந்தார்.

அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு ஈரான் தரப்பில் இருந்து போர் நிறுத்தம் தொடர்பாக கூறப்பட்ட முதல் கருத்து இதுவாகும்.

எனினும், தங்கள் ராணுவ தளத்தின் மீது ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால் அதனை மதிப்போம் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் எச்சரிக்கை

போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப்,

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் - ஈரானின் செயல்பாடுகள் மிகப்பெரிய விதிமீறல் நடவடிக்கையாகும். இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதோடுமட்டுமின்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் தொலைபேசி வாயிலாகவும் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com