விண்வெளி மையத்தில் சுபான்ஷு சுக்லா! அவரின் முதல் உரை என்ன தெரியுமா?

விண்வெளி மையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா உரையாற்றியதைப் பற்றி...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா குழுவினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா குழுவினர்.நன்றி - ENS
Published on
Updated on
1 min read

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா முதல் முறையாக உரையாற்றினார்.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் இந்தக் குழுவில் தேர்வாகியிருந்தனர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் சரியாக 28 மணிநேர பயணத்துக்குப் பின்னர் 420 கி.மீ. தொலைவில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் இன்று (ஜூன் 25) மாலை 4.01 மணியளவில் இணைந்தது.

ஆக்ஸியம்-4 மிஷனின் ஒரு பகுதியாக சுபான்ஷு சுக்லா குழுவினர், 60 பரிசோதனைகளைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர். அவற்றில் ஏழு சோதனைகளுக்கு சுக்லா தலைமை தாங்கவிருக்கிறார்.

விண்வெளி மையத்துக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா குழுவினருக்கு, அங்கிருந்தவர்கள் குளிர்பானங்கள் கொடுத்து வரவேற்றனர்.

இதுதொடர்பாக சுபான்ஷு சுக்லா குழுவினார் முன்னிலையில் பேசுகையில், “விண்வெளிக்கு வந்தது அற்புதமான ஒன்று. விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவராக இருப்பதில் மிகவும் பெருமையாகவுள்ளது.

சர்வதேச விண்வெளியில் இருந்த குழுவினர் எங்களுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். எனது எதிர்பார்ப்புகள் மற்றும் பார்வையை தற்போதைய குழுவினர் மிஞ்சிவிட்டனர்” என்றார்.

Summary

Indian astronaut Subhanshu Shukla gave his first speech from the International Space Station.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com