உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுடன் வட கொரியா! உலகப் போரின் அறிகுறியா?

உக்ரைனுடான போரில் ரஷியாவுக்கு கூடுதல் படைகளை வட கொரியா வழங்கவிருப்பதாக தென் கொரியா எச்சரிக்கை
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (கோப்புப் படம்)
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (கோப்புப் படம்)AP
Published on
Updated on
1 min read

உக்ரைனுடான போரில் ரஷியாவுக்கு கூடுதல் படைகளை வட கொரியா வழங்கவிருப்பதாக தென் கொரியா எச்சரித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும்நிலையில், இதுவரையில் போரின் முடிவு குறித்த அறிகுறி எதுவும் தென்படவில்லை. இந்த நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் உக்ரைனுக்கு எதிராகப் போரிடப் போவதாக தென் கொரிய செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

வடகொரியாவிடம் இருந்து, கூடுதல் படைகள் மற்றும் ஆயுதங்களையும் இறக்கி, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்குள் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக தென் கொரியா எச்சரித்துள்ளது.

உக்ரைனுடனான போரில் வீரர்கள் பற்றாக்குறை காரணமாக, முன்னரே வடகொரியாவில் இருந்து ராணுவ வீரர்களை ரஷியா களமிறக்கி இருந்தது.

கோப்புப் படம்
கோப்புப் படம்AP

இந்த நிலையில், தற்போது ரஷியா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் உக்ரைன் வீழ்த்தப்பட்டால், அது போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும். இவ்விரு நாடுகளும் ஒன்றிணைந்தால், உலகப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் உலகளாவிய அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், உக்ரைன் ஆக்கிரமிப்பு குறித்து, முன்னதாகவே உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறியிருந்தது. உக்ரைனின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் டினிப்ரோ வழியாக உக்ரைனின் அனைத்து பகுதிகளையும், இந்தாண்டு இறுதிக்குள் ரஷியா ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷியா 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. மூன்று ஆண்டு காலமாக இடைவிடாத தாக்குதலை உக்ரைன் தாக்குப் பிடித்து வருகிறது.

எத்தனையோ பேச்சுவார்த்தைகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்டனங்கள் ஆகியவை குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாகத் தொடா்ந்து உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது ரஷியா. இருப்பினும், முடிவேதும் எட்டப்பட்டதுபோலத் தெரியவில்லை.

இதையும் படிக்க: அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com