
மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் மனைவியின் பிறந்தநாளில், மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மனைவியான பிரிஸில்லாவின் 40 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கிராமி விருது பெற்ற அமெரிக்கப் பாடகர் பென்சன் பூன் அணிந்த ஆடையைப் போன்று அணிந்து அதன் மீது கருப்பு உடையை அணிந்து, மார்க் ஜூக்கர்பெர்க் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மனைவி பிரிஸில்லாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஆடைகளைக் களைந்து பாடகரின் உடையில் நிகழ்ச்சியில் மார்க் வலம் வந்தார். மார்க்கின் இந்த செயல்பாடு, பிரிஸில்லாவின் சிரிப்பலையை நிகழ்ச்சி முழுவதும் ஆட்கொள்ள வைத்தது என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பான விடியோக்களை மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2012 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துகொண்ட மார்க் ஜூக்கர்பெர்க்குக்கும் பிரிஸில்லாவுக்கும் 3 மகள்கள் உள்ளனர்.
இதையும் படிக்க: காஸாவுக்குள் உதவிப் பொருள்கள் நுழைவதை நிறுத்திய இஸ்ரேல்!