
தென் கொரியாவில் கிளர்ச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட யூன் சுக் இயோல் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், நீதிமன்றத்தின் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.
தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி, அதிபர் யூன் சுக் இயோல் டிசம்பர் மாதத்தில் ராணுவ அவசர நிலையை அறிவித்தார். ராணுவ அவசர நிலைக்கு, நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியதால், சில மணி நேரங்களில் உத்தரவு கைவிடப்பட்டது.
இதனிடையே, ராணுவ அவசர நிலை உத்தரவு என்பது கிளர்ச்சிக்கு சமமானது என்று யூன் சுக் மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
தென் கொரிய வரலாற்றிலேயே அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த குற்றத்தில், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றெல்லாம் கூறினர்.
அவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பதவி நீக்கம் செய்வதுடன், அடுத்த இரு மாதங்களுக்குள் தேர்தலும் நடத்தப்படலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.