
பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் தனது நாற்காலியுடன் நாடாளுமன்றத்தைவிட்டு ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறியே சம்பவம் இணையத்தில் வைராலாகி வருகிறது.
கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் 7 ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி மார்ச் 10ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்தெடுக்கும் முயற்சியில் கனடா வங்கியின் ஆளுநரான மார்க் கார்னி புதிய பிரதமராகவும், லிபரல் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சில நாள்களில் அவர் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இதையும் படிக்க: கிரீன்லாந்தில் தேர்தல்: அமெரிக்காவுடன் இணைய வாக்காளர்கள் விருப்பம்?
இந்தநிலையில், புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னியைச் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார். தமது பதவிக்காலம் முடிவடைவதால் நாடாளுமன்றத்தைவிட்டு ட்ரூடோ வெளியேறினார். ஜஸ்டின் ட்ரூடோ புதிய பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரூடோ கடந்த பத்தாண்டுகளில் லிபரல் கட்சியின் சாதனைகளையும் எடுத்துரைத்தார். அதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் லிபரல் கட்சி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இது முடிந்ததும் ஒட்டாவாவில் இருக்கும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ நாக்கை நீட்டிக்கொண்டு தனது நாற்காலியையும் தூக்கிக்கொண்டு வெளியேறினார்.
ஜஸ்டின் ட்ரூடோ கையில் நாற்காலியுடன் நாக்கை காட்டிக்கொண்டு வெளியேறிய நிகழ்வு குறித்து என்ன சர்க்கஸ் இது? என்றும் அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகி விட்டதாகவும் இணையதளவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இந்தியாவிற்கு வரும் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.