பாகிஸ்தானில் ரயில் சிறைப்பிடிப்பு: பிணைக் கைதிகளாக 450 பயணிகள்!
பாகிஸ்தானில் ரயில் சிறைபிடிக்கப்பட்டு பிணைக் கைதிகளாக 450 பயணிகள்

கோப்புப்படம்

கோப்புப்படம்
பலோச் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், தென்மேற்கு பாகிஸ்தானில், ரயில் மீது தாக்குதல் நடத்தி ரயிலை சிறைப்பிடித்து, அதிலிருந்த 450 பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலோசிஸ்தான் மாகாணம் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
இதில், ரயில் ஓட்டுநர் காயமடைந்ததையடுத்து ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 450 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருபப்தாக பலோச் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், ரயிலில் இருந்த 6 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் என்று அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...