கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இலங்கை இறுதிக்கட்டப் போர்: முக்கிய தளபதிகளுக்கு பிரிட்டன் தடை

இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு போ் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

News image

(இடமிருந்து) சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய வினாயகமூர்த்தி முரளீதரன்.

Updated On :25 மார்ச் 2025, 9:02 pm

Din

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு பேர் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2009 உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கையின் முன்னாள் முப்படை தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோர் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.

இது தவிர, இதே குற்றச்சாட்டின் பேரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்து, பின்னர் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி நாடாளுமன்ற உறுப்பினரான வினாயகமூர்த்தி முரளீதரன் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.

இதையடுத்து, இந்த நான்கு பேரும் இனி பிரிட்டனுக்கு வர முடியாது; அவர்களுக்கு பிரிட்டனில் சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.